• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி இன்று நடைபெற்றது.

Byadmin

Jul 30, 2021

நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் NPNK கலை பண்பாடு மன்றம் இணைந்து நடத்திய இணையவழி கைவினைப் பயிற்சி இன்று நடைபெற்றது.
இன்று நடைபெற்ற பயிற்சியில் மைதா மாவில் அழகிய உருவங்கள் தாரிப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி மாவட்டக் காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி துவங்கி வைத்தார். இப்பயிற்சியினை தென்காசி ஹில்டன் மெட்ரிக் பள்ளியின் கவின்கலை ஆசிரியர், பிரபு நடத்தினார். இன்றைய நிகழ்வில் மைதா மாவு கொண்டு பாம்பு, பல்லி, தவளை போன்ற உருவங்கள் தயாரிப்பு மற்றும் அதில் வண்ணம் தீட்டுதல் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவ்ட்டங்களை சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ- மாணவியர் மற்றும் மகளிர் மிகவும் ஆர்வத்துடன் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். NPNK கலை பண்பாடு மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மு.வெ.ரா. நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்து நடத்தினார்.