உள்ளாட்சித்துறை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது கொடுக்கப்பட்ட ஊழல் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் நேற்று காலை முதல் இரவு வரை சென்னையில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் வைத்து விசாரிக்கப்பட்டார். விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர் நள்ளிரவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை செய்துவிட்டு பின்னர் வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.