• Thu. Jul 10th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

வாய்க்கொழுப்பால் வசமாக சிக்கிய மீரா மிதுன்… காதலரும் கைது!

By

Aug 15, 2021

தன்னைத் தானே சூப்பர் மாடல் எனச் சொல்லிக்கொண்டு தேவையில்லாமல் சோசியல் மீடியாக்களில் சர்ச்சை கிளப்பி வந்த மீரா மிதுன் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியலின மக்களையும், அதைச் சார்ந்த சினிமா இயக்குநர்களையும் தரக்குறைவாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து மீரா மிதுனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணைக்கு சம்மன் அனுப்பியும், மீரா மிதுன் ஆஜராகாமல் தலைமறைவானார்.

அத்தோடு நில்லாமல் என்னை கைது செய்வது கனவிலும் நடக்காது என சவால் விட்டு காவல்துறையினரை கடுப்பேற்றினார். இந்நிலையில் தான் நேற்று கேரள மாநிலம் ஆழாப்புலாவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கியிருந்த மீரா மிதுனை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அப்போது கூட மீரா மிதுன் போலீசாரை தரக்குறைவாக பேசி வாக்குவாத்தில் ஈடுபட்டார். தனக்கு எதிராக காவல்துறையினர் அராஜகமாக செயல்படுவதாக வீடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக கேரள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீரா மிதுன், போலீஸ் வாகனம் மூலமாக தற்பொழுது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டிருக்கிறார்.

அங்கு வைத்து மீரா மிதுனிடம் பட்டியலினத்தவர்களை அவதூறாக பேசிய வீடியோவை காண்பித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைக்கு பிறகு மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அதன்பிறகு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீரா மிதுனுடன் நீண்ட காலமாக வசித்து வந்தவரும், அவருடைய காதலருமான அபிஷேக் ஷ்யாம் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.