ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஆசாரி தெருவை சேர்ந்த நிர்மலாதேவி ஜெயராமான் தேவிபட்டினம் ஊராட்சி மன்ற உறுப்பினர் கொழுந்தனார் தினேஷ் வயது 34 வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
தற்போது கொரணா காலம் என்பதால் சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து திரும்பிய தினேஷ் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக தச்சு வேலை செய்து வந்தார் ஆர்எஸ் மங்கலத்தில் வேலை செய்துவிட்டு வீடு திரும்பி வரும்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் பின்பக்கமாக மோதியதால் சம்பவ இடத்தில் பலியானார் இவருக்கு இரண்டு சிறு பிள்ளைகள் உள்ளனர் திருப்பாலைக்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.