ஒடுக்கப்பட்ட அடிதள மக்களுக்காக போராடிய ஸ்டேன் சுவாமி மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்ததோடு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அவர் மரணம் அடைய காரணமாக இருந்த மத்திய பாஜக அரசை கண்டித்து குமரிமாவட்ட எஸ். டி. பி. ஐ . கட்சி சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்தும் அவர்கள் உரிமைக்காகவும் போராடிய ஸ்டேன் சுவாமி அவர்களை பொய் வழக்குகள் போட்டு கொடுமையான UAPA சட்டத்தில் சிறையில் அடைத்ததோடு அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல் அவரது மரணத்திற்கு காரணமான மத்திய பாஜக அரசை கண்டித்து நாகர்கோவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு குமரிமாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.