• Fri. Apr 26th, 2024

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் தேதி குறிப்பிடாமல் மூடப்படுகிறது மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

Byadmin

Aug 2, 2021

மதுரை மாவட்டத்தில் கோவிட் 19 தொற்று பரவாமல் இருக்க பொதுமக்கள் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது மதுரை மாவட்டத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மலர்சந்தையில் சமூக இடைவெளியை பின்பற்றபடாமலும் முகக்கவசம் அணியாமலும், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. நோய் தோற்று பரவலை தடுக்கும் பொருட்டு தற்காலிகமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தை தேதி குறிப்பிடாமல் மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு மக்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சேகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்,மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்த, பழச்சந்தை, மலர் அங்காடிகள்,பரவை மொத்த காய்கறி சந்தை ஆகிய சந்தைகளில் சில்லரை விற்பனை தடை செய்யப்படுகிறது எனவும், மொத்த விற்பனை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் மேற்படி சந்தைகளில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் கட்டாய மணிவரை வியாபாரிகள் உறுதிசெய்யவேண்டும். சந்தைகளில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அதிக அளவில் கூட்டம் காணும் பட்சத்தில் சந்தை இழுத்து மூடப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *