மதுரையில் கட்டப்பட்டு வரும் புதிய பெரியார் பேருந்து நிலையத்தில் தந்தை பெரியாருக்கு முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க வேணடும் பாஜக ஆர்.எஸ்.எஸ் ஆகிய அமைப்புகளை தடை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்புலிகள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளுவர் சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தென் மண்டல துணைசெயலாளர் சிதம்பரம் தலைமை வகித்தார். துணைச்செயலாளர் முகிலன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பாஜக ஒன்றிய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.