மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசு பொது இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசு பொது இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பின் வழியே மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது, மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுதும் பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள பொது இன்சூரன்ஸ் கூட்டுப் போராட்ட நடவடிக்கைக் குழு சார்பில் 100க்கும் மேற்பட்டவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர், 1971 ஆம் ஆண்டு முதல் செயல்படும் பொது இன்சூரன்ஸ் துறையில் 19.5 கோடி முதலீடு போடப்பட்டது, படிப்படியாக வளர்ச்சி அடைந்த முதலீடு 75 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு பாலிசிகளை ஈட்டி உள்ளது எனவும், பொது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதால் மத்திய அரசும், மக்களும் பாதிக்கபடுவார்கள் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் மத்திய அரசு இம்முடிவை கைவிடவில்லை என்றால் அடுத்த கட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.