
கொரோனாவில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்துக்குரியது என இன்று நடைப்பெற்ற சைக்கிள் பேரணியில் போராட்டத்தில் கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.விஜய் வசந்த் செய்தியாளரிடம் தெரிவித்தார-மேலும் அனுமதி பெறமால் சைக்கிள் பேரணி நடைப்பெற்றதால் எம்.பி.விஜய்வசந்த் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கைது
மத்தியில் ஆளும் பாஜக அரசு பெட்ரோல்,டீசல் மற்றும் எரிவாயு விலையை உயர்த்தியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் டெரிக் சந்திப்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது இந்த பேரணியை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தொடங்கி வைத்தார் மேலும் இந்த சைக்கிள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்..
