• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பள்ளிகளை திறந்து கொரானா பரப்ப தயாராகும் தமிழக அரசு!…

ByIlaMurugesan

Aug 12, 2021

குழந்தைகளை தாக்கும் 3வது அலை எப்படி இருக்கும் என்ற பீதியில் நாடு முழுவதும் மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் பெங்களுரு நகரத்தில் 19 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரானா பாதிப்பு துவங்கியுள்ளது.

இந்நிலையில் செப்.1ம் தேதி பள்ளிகளை திறக்கப் போவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் தடுப்பூசி போட்டுள்ளதால் நோய் பரவலை தடுக்கும் ஆயுதமாக தடுப்பூசி இருப்பதாக அமைச்சர் தெரிவிக்கிறார். ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதை அவர் மனதில் கொள்ளவில்லை. வெளிநாடுகளில் டெல்டா கொரானா தொற்று அதிக பாதிப்பு இருந்தாலும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்று பலர் சொல்வதால் நாங்கள் பள்ளிகளை திறக்க உள்ளோம் என்கிறார் அமைச்சர். ஆனால் பக்கத்து மாநிலமான பெங்களுருவில் தொற்று பரவுதை கணக்கில் கொள்ளவில்லை. இதனால் தமிழக குழந்தைகளுக்கு என்ன ஆகுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.