• Tue. Oct 8th, 2024

பதிவாளர் அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த பதிவாளர் உயர் மேடைகள் அகற்றம். அமைச்சர் உத்தரவு எதிரொலி….

Byadmin

Jul 29, 2021

ஜூலை. 29- கோவையில் உள்ள சார்பு பதிவாளர் அலுவலகங்களில் பதிவாளர் அமர்ந்து இருப்பதற்கு உயர்ந்த மேடை அமைக்கப்பட்டிருக்கும். அதற்குக் கீழ் இருந்து மக்கள் அவரிடம் தொடர்பு கொள்ளும் படியாக அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவை சேலத்தில் கடந்த வாரம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வு செய்தார். அப்போது பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமர்ந்து பதிவு பணி செய்து வருவதால் பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி சேவை வழங்குவதில் சிரமமாக இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு பணி செய்ய வேண்டுமென அமைச்சர் உத்தரவிட்டார். மேலும் சார் பதிவாளர் அலுவலகங்களில் அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்ட நிலையில் அரசுக்கு செலுத்தும் கட்டணங்களை இணைய வழியாக செலுத்துவதால் சார்பதிவாளர்கள் பணத்தை கையாள வேண்டிய அவசியம் இல்லை. எனவே உயர் மேடைகள் தற்போது தேவையில்லை. பதிவு அலுவலகங்கள் தங்கள் இருக்கையை சமதளத்தில் அமைத்து சுற்றி உள்ள தடுப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என பதிவுத்துறை தலைவர் ஜோதி நிர்மலாசாமி துறை அலுவலர்களுக்கு தெரிவித்தார். இதையடுத்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சார்பு பதிவாளர் அலுவலகங்களிலும் இருந்த உயர் மேடைகள் அகற்றப்பட்டு சமதளத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *