• Wed. Mar 19th, 2025

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பகுதியில் கடந்த 10 நாட்களில் 4 பசுமாடுகள் புலி அடித்து கொன்றது!…

Byadmin

Aug 6, 2021

நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை பேரூராட்சி ,தேவர் எஸ்டேட் பகுதியில் கடந்த 10 நாட்களில் 4 பசுமாடுகள் புலி அடித்து கொன்றது , மனிதர்களை தாக்கும் முன் புலியை கூண்டு வைத்துப் பிடிக்க வலியுறுத்தி இப்பகுதி மக்கள் பணிகளுக்கு செல்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத்தொடர்ந்து கூடலூர் ஆர்.டி.ஓ அவர்கள் இந்த பகுதிக்கு வந்து மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ,புலியை பிடிப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும்,அனுமதி கிடைத்தவுடன் ஒன்று அள்ளது இரண்டு நாட்களில் புலியை கூண்டு வைத்துப் பிடிப்பதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததை தொடர்ந்து இப்பகுதி மக்கள் காத்திருப்புப் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் இதுவரை புலியை பிடிப்பதற்கான எந்த வித செயல்பாடுகளும் வனத்துறையால் மேற்கொள்ளபடவில்லை. மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

இது தொடர்ந்தால் மக்கள் அனைவரும் கூடலூர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.இது குறித்து கூறிய மாவட்ட வனச்சரக அலுவலர் தேவன் எஸ்டேட் மக்களின் தகவல் அடிப்படையில் புலியின் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர் என்றும் இரண்டு நாட்களுக்குள் புலியை பிடித்து விடுவோம் என்று உறுதி அளித்துள்ளார்.