கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரயிலில் அடிபட்டு டெய்லர் ஒருவர் இறந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்னிமடத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(38) டெய்லரான இவருக்கு திருமணமாகி பதினைந்து வயதில் மகனும் உள்ளார். இந்நிலையில் இன்று காலை சதீஷ்குமார் தனது மோட்டார் சைக்கிளில் வந்து நாகர்கோவில் புத்தேரி மேம்பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் வந்த ரயில் மோதி சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.