

ஆலங்குளத்தில் நண்பர்களுடன் நள்ளிரவில் மான் வேட்டைக்கு சென்றவர் மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி இறந்தார்
நெல்லை மாவட்டம் கல்லிடை குறிச்சியை சேர்ந்தவர் வள்ளிக்குமார் (வயது 30). இவரது மனைவி சரண்யா. தம்பதிக்கு ஒரு மகன் மகள் உள்ளனர். தென்காசி மாவட்;டம் ஆலங்குளம் துத்திகுளம் சாலை மற்றும் மாயமான் குறிச்சி கிராமம் காட்டு பகுதியில் மான்கள் முயல்கள் ஏராளம் உள்ளது.
இந்த நிலையில் நேற்றிரவு வள்ளிக்குமார் தனது நண்பர்கள் ஒரு சிலருடன் கல்லிடைக்குறிச்சியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம் வந்துள்ளார். ஆலங்குளம் துத்திகுளம் சாலை காட்டுப்பகுதியில் இரவு மான் முயல்களை தேடி வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
துத்திகுளம் சாலை காட்டுப்பகுதியில்; பால்ராஜ் என்ற விவசாயி தன்னுடைய நிலத்தில் மிளகாய் பயரிட்டுள்ளார். காட்டுப்பன்றி வனவிலங்குளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க மின்வேலி அமைத்துள்ளார்.
நேற்று நள்ளிரவு காட்டுப்பகுதியில் சுற்றித்திரிந்த அந்த கும்பல் விவசாயி தோட்டத்தை கடந்து செல்ல முயன்றபோது மின்சாரம் தாக்கி வள்ளிக்குமார் சம்பவ இடத்தில் இறந்தார். மின்சாரம் தாக்கி இறந்தவர் சடலம் தென்காசி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆலங்குளம் ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த வள்ளிக்குமாருடன் சென்றவர்கள் யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் ஆலங்குளத்தில் ;பரபரப்பை ஏற்படுத்தியது.
