கொரோனா 3வது அலையை தொடக்கத்திலேயே கட்டுப்படுத்த மாவட்டங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு அறிவுறுத்து இந்த நிலையில் திருச்சியின் முக்கிய கோயில்கள் மற்றும் காவிரி கரையோரப் பகுதிகளில் பக்தர்களுக்கு இன்றும் நாளையும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஆடி மாதம் முக்கிய திரு நாட்களில் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் போன்ற முக்கிய திருக்கோவில்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் அதை தவிர்க்கவும் மேலும் நாளை ஆடி மாதம் முக்கிய விழாவாக கருதப்படும் ஆடி 18 ஐ முன்னிட்டு ஶ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை மற்றும் கரையோர பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் இன்றும் நாளையும் பக்தர்களுக்கு தடை விதித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவிட்டுள்ளார்,
இதையடுத்து அம்மா மண்டபம் நுழைவாயில் மற்றும் கோயில்களில் உள்ள அனைத்து நுழைவு வாயில்கள் அடைக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைத்து இன்றும் நாளையும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது, இருப்பினும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் கோவில் நுழைவு வாயில்களில் சூடம் ஏற்றியும் விளக்கேற்றியும் வழிபாடு செய்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்..
மேலும் ஆடி 18ம் பெருக்கு அன்று லட்சக்கணக்கான மக்கள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படைத்துறை மற்றும் கரையோர பகுதிகளில் ஒன்றுகூடி காவிரி தாயை வணங்கி வழிபாடு செய்வர் இரு கரையை தொட்டவாறு காவிரியில் அதிகமான நீர் இருந்தும் இந்த வருடமும் ஆடி பதினெட்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் அம்மா மண்டபம் காவிரி படித்துறை பக்தர்கள் இன்று வெறிச்சோடி காணப்பட்டது…