கோவை வலசை பாதை மாறியதால் யானைகள் தடாகம் பகுதியில் முகாமிட்டுள்ளன. அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள் உள்ளன இந்த யானைகள் இரவு நேரங்களில் மலையிலிருந்து இறங்கி கணுவாய், தடாகம், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குச் சென்று உணவு உட்கொள்வது வழக்கம்.
இந்த நிலையில் மூன்று காட்டு யானைகள் கூட்டமாக தங்கள் வலசைப்பாதை மாறி நேற்று இரவு மலையின் கீழே இறங்கி உள்ளன.
இந்த யானைகள் தடாகம் வீரபாண்டி பகுதியில் தற்போது முகாமிட்டு உள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் யானைகளை மீண்டும் காட்டுப்பகுதிக்குள் விரட்ட முயற்சி செய்து வருகின்றனர்.