• Fri. Apr 18th, 2025

கோவையில் தொடர் வழிப்பறி இருவர் கைது…

Byadmin

Jul 23, 2021

கோவையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 60 மீட்டர் அதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இதுகுறித்து அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் கோவை எஸ்.பி.செல்வநாகரத்தினம் உத்தரவின்படி காரமடை காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் உதவி ஆய்வாளர் செந்தில் குமார்,தலைமை காவலர்கள் மகேந்திரன்,ஜெயபாலகிருஷ்ணன்,சரவணகுமார்,சுரேஷ்குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தனர்.இந்த நிலையில் காரமடை மற்றும் அன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் திருட்டு மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த கிருஷ்ணராஜ் (37) மற்றும் ஷிகாபுதீன்(32) உள்ளிட்ட இருவரை தனிப்படையினர் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து 6 பவுன் தங்கச்சங்கிலியினையும் பறிமுதல் செய்தனர்.பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
தொடர் திருட்டு மற்றும் செயின் பறிப்பு சம்பவங களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.