


கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற ரேசன் மண்ணெண்ணெய் பறிமுதல். விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலெட்சுமி நடவடிக்கை .
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலை விளவங்கோடு வட்டாட்சியர் விஜயலட்சுமி, துணை வட்டாட்சியர் சுனில் குமார், உதவியாளர் சதிஷ் , ஓட்டுநர் ஜாண்பிரைட் குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் சிராயன்குழி பகுதி வழியாக ஒமனி காரை சந்தேகத்தின் பேரில் துரத்தி சென்ற போது குறுக்கு சந்தில் வாகனத்தை நிறுத்தி ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து வாகனத்தை வட்டாட்சியர் சோதனை செய்தபோது இந்த வாகனத்தில் 25 கேன்ங்களில் சுமார் 1000 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணை பதுக்கி கேரளாவிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இந்த மண்ணெண்ணை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


