கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு. தமிழக முதல்வர், திரு. மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தேர்தல் வாக்குறுதியில் புகைப்பட துறைக்கென தனி நல வாரியம் அமைக்கப்படும் என்றதற்காக நன்றி தெரிவித்ததோடு, நமது தமிழ்நாடு வீடியோ போட்டோகிராஃபர்ஸ் அசோசியேஷன் சார்பாக
கொரோனா நிவாரண நிதிக்கு ரூபாய்.2 லட்சத்திற்கான காசோலையை
மாநில தலைவர் திரு.P.A.மாதேஸ்வரன் அவர்கள் வழங்கினார்கள்.
மேலும் புகைப்பட துறைக்கான தனி நலவாரியம் விரைந்து அமைக்க வேண்டி கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது. இதனை கனிவுடன் கேட்டறிந்த முதல்வர் அவர்கள் விரைந்து நல வாரியம் அமைக்கப்படும் என உறுதியளித்தார். இந்நிகழ்வில் மாநில பொதுச்செயலாளர் திரு.A.சிவகுமார், மாநில துணைத்தலைவர் திரு.N.சூர்யா, மண்டல செயலாளர் திரு.G.சுரேஷ், கிருஷ்ணகிரி மாவட்ட கௌரவ தலைவர் திரு.K.அசோக் பாபு, மாவட்ட செயலாளர் திரு.T.A.சக்கரவர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் திரு.A.மகபூப் பாஷா ஆகியோர் உடனிருந்தனர்.