நாடெங்கும் கொரானா பெரும் தொற்று மூன்றாம் அலை பரவல் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாவட்டம் தோறும் உள்ள ஊராட்சிகளில் பொது மக்களுக்கு கொரானா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையொட்டி,
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊராட்சியின் சார்பில் இன்று கொரானா தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில்,பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும்,சமூக இடைவெளியை பின்பற்றியும்,அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவியும், கொரார தொற்றில் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்று, நாட்டுப்புற பாடல்கள் பாடியும்,துண்டுப் பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.