தமிழ் புலவர்களில் மிக முக்கியமானவரும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவருமான கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 146 வது பிறந்தநாளையொட்டி அவரது திரு உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ் புலவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. இவர் கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் 1876 ம் ஆண்டு ஜுலை 27 ம் தேதி பிறந்தார். வரலாற்று பாடல்கள் சுதந்திர போராட்ட பாடல்கள் குழந்தைகள் பாடல்கள் உட்பட ஏராளமான பாடல்கள் கவிதைகள் இயற்றியுள்ளார். கவி புகழின் உச்சியில் இருந்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை 1954 ம் ஆண்டு மறைந்தார். இவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் 2005 ம் ஆண்டு இந்திய அரசால் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது 146 வது பிறந்தநாள் தமிழக அரசால் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி குமாரி மாவட்டம் சுசீந்திரம் ரத வீதியில் அமைந்துள்ள கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை திருஉருவ சிலைக்கு குமரி மாவட்ட ஆட்சியர் மா . அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தமிழ் புலவர்களும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தமிழ் புலவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளைக்கு மரியாதை செலுத்தினார்கள். விஷுவல் – கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை திரு உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் காட்சி.
கவிமணிக்கு குமரி ஆட்சியர் மரியாதை…
