
கொரோனா பரவல் காரணமாக காவிரி கரைகளில் ஆடிபெருக்கு கொண்டாடவும், பொதுமக்கள் கூடுவதற்கும் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். கடந்த காலங்களில் ஆற்றில் தண்ணீர் இன்றி பாலைவனம் போல் காட்சியளித்தது, இதனால் பம்புசெட் மூலம் ஆடிபெருக்கு விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்தாண்டு ஆறு நிறைய தண்ணீர் சென்றும் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் நீர்நிலைகளில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
