எம்ஜிஆர் வேடமிட்டு பேட்டை நரிக்குறவர்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு.
நெல்லை மாவட்டம் பேட்டை நரிக்குறவர் காலனியில் கொரோனா தடுப்பூசி முகாம் பல்வேறு கட்டங்களாக நெல்லை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. இந்த முகாமில் நரிக்குறவர்கள் யாரும் கொரோனா தடுப்பூசி போட மறுத்து வந்தனர்.மாநகராட்சி சார்பில் பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இவர்கள் கொரோனா தடுப்பூசி போட மறுத்து வந்த நிலையில் ரோட்டரி கிளப் ஆஃப் டுவின் சிட்டி சார்பில் எம்ஜிஆர் வேடம் அணிந்து நரிக்குறவர்கள் மத்தியில் அவர்களை கட்டித்தழுவி கொரனோ தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் நரிக்குறவர்கள் தடுப்பூசி போடுவதற்கு சம்மதம் தெரிவித்தனர் அதனடிப்படையில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா, பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் டாக்டர் ராணி ஆகியோர் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தனர்.