தென்னிந்திய திரையுலகிலேயே தமிழ், மலையாளம், தெலுங்கு ரசிகர்களை தன்பக்கம் வசீகரிக்கும் முன்னணி நடிகையாக சாய் பல்லவி வலம் வந்து கொண்டிருக்கிறார். ஓவர் மேக்கப், பந்தா எதுவும் இல்லாமல், பக்கத்து வீட்டு பெண் போல பாந்தமாக வலம் வரும் சாய் பல்லவியை யாருக்கு தான் பிடிக்காது. மற்ற நடிகைகள் அவர்களது ஆடைகளாலும், கிளாமராலும் ரசிகர்களைக் கவர முயற்சிக்க சாய் பல்லவி மட்டும் அப்படி எதுவுமில்லாமல் தனது நடனத்தால் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.
தமிழில் தனுஷ் உடன் சாய் பல்லவி நடித்த மாரி 2 படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் சமீபத்தில் 1200 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. தற்போது தெலுங்கில் சாய் பல்லவி நடித்துள்ள ‘பிடா’ படப் பாடலான ‘வச்சிந்தே’ 309 மில்லியனை கடந்துள்ளது.
இந்நிலையில், சாய் பல்லவி நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘லவ் ஸ்டோரி’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘சாரங்க தரியா’ பாடல் தற்போது 300 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்தடுத்து சாய்பல்லவி ஆட்டம் போடும் பாடல்கள் ஹிட்டடித்து வருகிறது.