நாகர்கோவிலில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் கடைசிகாலம் மிக பரிதாபமாக இருக்கும் என்றும் மிரட்டும் வகையிலும் பாரதமாதாவை இழிவு படுத்தி கலவரத்தை தூண்டும் விதத்திலும் கொச்சைபடுத்தி பேசி வரும் கிறிஸ்துவ ஜனநாயக பேரவையின் உயர்மட்டக்குழு உறுப்பினர் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் போட்ட பிச்சையா தான் திமுக வென்றது. அவரது பேச்சின் சாரம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் கடைசி காலம் மிக பரிதாபகரமாக இருக்கும் என்றும் பேசியிருக்கிறார். அவர் மீதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோலைக்கண்ணன் தனது புகாரில் கூறியிருக்கிறார்.