நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள படம் அண்ணாத்த. அந்த படத்தில் முதல் பார்வை டீசர் வெளியிடப்படாத நிலையில் ரசிகர்களின் ஆவல் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் உள்ளிட்ட பல ஊர்களில் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகிறார்கள். அது பற்றி ரஜினி ரசிகர் மன்ற தலைவர்கள் விரைவில் டீசர் வெளியிடுவதை எதிர்ப்பார்ப்பதாக நமது அரசியல் டுடே ஊடகத்திற்கு தெரிவித்ததாவது.
மயிலாடுதுறை மாவட்டம் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நகர செயலாளர் பவுன் முருகானந்தம் கூறியதாவது.
ஆகஸ்ட் 12ம் தேதி சிறுத்தை சிவாவின் பிறந்த நாளன்று முதல் பார்வை டீசர் வெளியிடுவதாக நான் பத்திரிக்கையில் படித்தேன். தலைவர் சன் பிக்சர்ஸ்க்கு படம் கொடுத்துள்ளார். என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியவில்லை. தெரிந்து கொண்டு ஆதாரத்துடன் பேசுகிறேன். இந்த படம் காலதாமத்திற்கு காரணம் கொரான தொற்று காலம். தலைவர் படத்தை அரசியலுக்கு அப்பாற்பட்டு படத்தை பார்க்க நாங்கள் தயாராக உள்ளோம். அவர் மீதுள்ள அன்பினாலும் பாசத்தினாலும் ரசிகர் மன்றத்திற்கு வந்தோம். தற்சமயம் அரசியல் இல்லாததால் அவரது சொல்படி நாங்கள் நடப்போம். தலைவரும், தயாரிப்பாளரும் சேர்ந்து இந்த படத்தின் முதல் பார்வை டீசரை பார்க்க ஆவலாக இருக்கிறோம். எனவே விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பவன் முருகானந்தம் தெரிவித்தார்.


ரஜினி ரசிகர் மன்ற திருப்பரங்குன்றம் பகுதி நகரச்செயலாளர் கோல்டன் சரவணன் கூறியதாவது.
இவ்வளவு காலமும் சரியாக போயிட்டு இருந்தது. தலைவர் அரசியலிலிருந்து கொஞ்சம் பின்வாங்கியது இது போன்ற பிரச்சனைக்கு காரணம். விரைவில் டீசரை வெளியிட வேண்டும் என்று பல முறை வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தோம். சிலர் தலைவரை தரம் தாழ்த்தி கூட பதிவிட்டார்கள். நாங்கள் எதையும் கண்டு கொள்ளவில்லை. இப்போது டாக்டர் சிவாவின் பிறந்த நாள் வருகிற 12ம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. காலதாமத்திற்கு கொராணாவை காரணம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். விரைவில் ஃ பர்ஸ்ட் லுக் டீசர் வெளியிட வேண்டும் என்பதில் நாங்கள் எல்லாம் ஆர்வமாக உள்ளோம் என்று கோல்டன் சரவணன் தெரிவித்தார்.