தமிழக – கேரளா எல்லைகளான கோவை வாளையார் மற்றும் வேலந்தாவளம் வழியாக கேரளாவிற்க்கு பணம் மற்றும் தங்கம் கடத்தல் அதிகரித்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழக கேரளா எல்லை பகுதியான சோதனை சாவடிகளில் காவல் துறையின் அவ்வபோது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கோவையில் இருந்து வேலந்தாவளம் வழியாக கேரளா நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை வேலந்தாவளம் சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது அந்த இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்து இருந்த சுமார் 40 இலட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. விசாரணையில் அவர் கேரளா மாநிலம் பாலக்காடு, வானியம்குளம் பகுதியை சேர்ந்த சுதீர் என்பது தெரியவந்து உள்ளது.

மேலும் விசாரணையில் கேரள மாநிலம் ஒத்தப்பாலம் பகுதியில் உள்ள Sobana Jewellery என்ற நகை கடையில் இருந்து பழைய தங்கத்தை கோவை PK-Street பகுதிக்கு கொண்டு வந்து விற்று பணமாக கேரளா கொண்டு செல்வதாக தெரிவித்து உள்ளார்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








