• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அடக்கொடுமையே !! பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்… ரசிகர்கள் அதிர்ச்சி!…

By

Aug 9, 2021

கொரோனா நெருக்கடி காலத்தில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் மரணமடைந்து வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி 9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்து உயிருக்கு போராடி மீண்ட பிரபல நடிகை, திடீரென மரணமடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலையாள சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சரண்யா. சூர்யோதயம் என்ற தூர்தர்ஷன் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார். ஸ்வாதி என்ற தெலுங்கு சீரியலும் நடித்துள்ளார். தமிழில் கூட பச்சை என்கிற காத்து படத்தில் நடித்துள்ளார். சினிமா, சீரியல் என பிசியாக போய்க் கொண்டிருந்த சரண்யாவிற்கு கடந்த 2012ம் ஆண்டு தலைவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவரை சந்தித்தார். அப்போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது உறுதியானது. ஆனால் அது ஆரம்ப கட்டம் என்பதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார். அதன் பின்னர் சரண்யாவிற்கு எவ்வித பிரச்சனையும் இல்லை எனக்கூறினார்.

ஆனால் சில மாதங்களிலேயே அவருக்கு மீண்டும் தலைவலி ஏற்பட்டது. அதனால் அதற்கு அடுத்த ஆண்டே சரண்யாவிற்கு மூளையில் உள்ள கட்டியை அகற்ற மருந்துவர்கள் சர்ஜரி செய்தனர். ஆனால் தொடர்ந்து சரண்யாவிற்கு தலைவலி ஏற்பட்டதால் அடுத்தடுத்து 8 முறை மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதனால் படிப்படியாக நடிகை சரண்யா குணமடைந்து வந்துள்ளார். இறுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் நலமுடன் இருப்பதாக புகைப்படத்துடன் தகவல்கள் வெளியாகின. சமீபத்தில் உடல் நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரண்யா, சிகிச்சை பலனின்றி காலமானார். 8 முறை மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சைகளை எல்லாம் வென்று எமனோடு போராடி மீண்டு வந்தவர், திடீரென காலமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.