• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அடுத்த வேட்டைக்கு தயாரான யுடியூப் பிரபலங்களான கோபி – சுதாகர்

Byதன பாலன்

Jan 24, 2023

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களை தயாரிப்பதற்கு மட்டுமே பைனான்சியர்கள் கடன் தருகின்றனர் புதுமுகங்கள், வியாபார முக்கியத்துவம் இல்லாத நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு கடன் வாங்க முடிவதில்லை அதனால் யுடியூப், சமூகவலைதளங்களில் அறிமுகமானவர்கள் தாங்கள் உண்மை கதையை படமாக தயாரிக்க போவதாகவும், அதில் நடிக்க நடிகர் நடிகைகள் தேவை என சமூக வலைதளங்களில் விளம்பரங்களை வெளியிடுவார்கள் ஆர்வக்கோளாறில் வருகின்றவர்களை வானளாவ புகழ்ந்து நடிகராக ஒப்பந்தம் செய்து விட்டு சில நாள் கழித்து தங்கள் குறுக்கு வழியை பயன்படுத்துவார்கள் – பைனான்ஸ் கிடைப்பதற்கு தாமதமாகும் போல் தெரிகிறது அதனால் சுயாதீன நிதி ஏற்பாட்டில் படம் தயாரிக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம் என கூறி நடிக்க வந்தவர்களிடம் வசூல் வேட்டையை தொடங்குவார்கள் ஏற்கனவே வலைத்தளம் மூலம் சுமார் 6.5 கோடி ரூபாயை பொதுமக்களிடமிருந்து பெற்ற பரிதாபங்கள் கோபி – சுதாகர் படத்தை தொடங்கினோம் கொரோனா குறுக்கிட்டது அதனால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை அதற்கு மாற்றாக எங்கள் உழைப்பில் இருந்து படத்தை தயாரிக்கிறோம் என புதுசாக ஒரு கதையை கூறி
பரிதாபங்கள் புரொடக்சன்ஸ்’ வழங்கும், விக்னேஷ் S.C.போஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயனின் இயக்கத்தில், உருவாகும் புதிய படத்திற்கு நேற்று தொடக்கவிழாவை சென்னையில் உள்ள பிரசாத் பிரிவியூ தியேட்டரில் நடத்தியுள்ளனர்இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், ‘பரிதாபங்கள்’ புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இவர்களுடன் V.T.V.கணேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், வின்சு ரேச்சல் சாம், ரமேஷ் கண்ணா, Mu.ராமசாமி, முருகானந்தம், பிரசன்னா, கௌதம், ஹரிதா, யுவராஜ் கணேசன், டிராவிட், பிரகாஷ், ஜீவா சுப்பிரமணியம், கோதண்டம், வெங்கல் ராவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தப் படம் குறித்து கோபி – சுதாகர் பேசும்போது, “இந்தக் கதையை கேட்டவுடனே இது வழக்கமான கமர்ஷியல் சினிமாவாக இருக்காது எனப் புரிந்தது. நாம் அனைவரும் வாழ்க்கையில் சந்திக்கும் அனுபவங்கள்தான் படத்திலும் இருக்கும் ஆனால் அதோடு ஃபேண்டஸி கலந்து நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் இப்படம் இருக்கும்.
யு டூயூப் வீடியோக்களில் சிரிக்க வைப்பது வேறு. ஆனால் சினிமா எனும்போது ரசிகர்களிடம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கும். பரிதாபங்களில் இருக்கும் கோபி, சுதாகர் இதில் இருக்க மாட்டார்கள். ஆனால் இரண்டு இளைஞர்களின் வாழ்வில் நீங்களும் சில நாட்கள் இணைந்து பயணிப்பது போல் இருக்கும். ஒரு புது மாதிரியான நல்ல பொழுதுபோக்கு அனுபவமாக இப்படம் இருக்கும்” என்றனர். ஏற்கனவே பெற்ற 6.5 கோடிக்கு என்ன கணக்கு என்பதை பகிரங்கமாக அறிவிக்காமல் அடுத்த படத்திற்கான வசூல் வேட்டையை யுடியூப் பிரபலத்தை வைத்து கோபி – சுதாகர் குருப் இறங்கியுள்ளது என்கிறது வலைத்தள மற்றும் கோடம்பாக்க சினிமா வட்டாரம்