• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கிரிக்கெட்டில் வெள்ளிப் பதக்கம் பெற்ற இளைஞர் மகாராஜன், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு..,

ByKalamegam Viswanathan

Aug 29, 2023

இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள பெர்ஹிங்ஹாம் நகரில் நடைபெற்ற உலக பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய சார்பில் பங்கேற்ற தூத்துக்குடி சேர்ந்த இளைஞர் மகாராஜன் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் துரைசாமி பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் இவரது மனைவி சண்முக கனி இவர்களுக்கு மகாராஜன் (வயது 26) என்ற மகனும் செல்வி என்ற மகளூம் உள்ளனர் மகாராஜன் பிறந்தது முதலில் பார்வையற்றவராக உள்ளார் அவர் பார்வையற்றவராக இருந்தாலும் தனது தனி திறமை ஆர்வத்தால் கிரிக்கெட் போட்டியில் ஆர்வமாக இருந்துள்ளார் இதனால் இந்திய அணி சார்பாக தேர்வு செய்யப்பட்டு லண்டனில் உள்ள பெர்ஹிங்ஹாம் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இடம் பிடித்து ஆண்கள் போட்டியில் வெள்ளி மெடல் வென்று சாதனை படைத்துள்ளார் லண்டனில் இருந்து மதுரை திரும்பிய மகாராஜன் மதுரை விமான நிலையத்தில் செய்தி அவர்களை சந்தித்தபோது கடந்த 16 ஆம் தேதி 26 ஆம் தேதி வரை நடைபெற்ற பார்வையற்றவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றம் தமிழகத்திலிருந்து நான் ஒருவன் மட்டுமே பங்கேற்றேன். இதில் ஆண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் பெண்கள் பிரிவு தங்கப் பதக்கமும் வென்றுள்ளது.

முதன் முதலாக பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சேர்க்கப்பட்டு அதில் பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது தூத்துக்குடி எம்பி கனிமொழி அவர்கள் எனக்கு உற்சாகமும் ஊக்கம் அளித்து உதவி செய்தார் அதேபோல எம்எல்ஏ மற்றும் சிலர் எனக்கு உதவி செய்தனர் பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டிகளுக்காக மைதானங்கள் இல்லை கட்டணமும் அதிகமாக உள்ளது அரசு எங்களுக்கு உதவி செய்தால் மிகவும் நன்றாக இருக்கும் என தமிழக அரசுக்கு பார்வையற்றோர் சார்பாக கிரிக்கெட் மைதானம் வழங்க கோரிக்கை வைத்துள்ளார் . மேலும் தமிழக பார்வையற்றோர் கிரிக்கெட் பயிற்சியாளர் தினேஷ் எனக்கு ஊக்கமும் உதவியும் செய்தது பெரு மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.