• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய இளைஞர்!!

ByKalamegam Viswanathan

Jan 11, 2026

மதுரை திருப்பரங்குன்றம் தென்காள் கம்மாய் பைபாஸ் ரோட்டில் இருந்து விளாச்சேரி செல்லும் புதிய பாலத்தில் அதிவேகமாக இரு சக்கரம் வாகனம் ஓட்டி வந்த லிங்கேஸ்வரன் வயது 25 தென்பரங்குன்றம் சேர்ந்தவர் இவர் விளாச்சேரி புது பாலத்தில் இருந்து தென்பரங்குன்றம் செல்வதற்காக புது பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அதிவேகமாக பாலத்தில் வந்ததில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நோ என்ட்ரி பகுதியில் இருசக்கர வாகனத்துடன் பறந்து சென்று கீழே விழுந்தார் இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக அக்கம்பக்கத்தினர் 108 அவசர கால உறுதிக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பரங்குன்றம் 108 அவசரகால ஊர்தி படுகாயம் அடைந்த அவரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் இதில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர் மேலும் பல இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

சம்பவம் குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பாலத்தில் அதி வேகத்தில் அனைத்து வாகனங்களும் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர். மேலும் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் தரமான வேகத்தடை அமைத்தால் மட்டுமே விபத்துக்களை தவிர்க்க முடியும் எனவும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலத்தினால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா காவல்துறை அதிகாரி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். விபத்து நடக்காத வகையில் இப்பகுதியை மாற்ற வேண்டும் என கோரிக்கையும் எடுத்திருந்தார் எனினும் தொடர் விபத்துகளால் அச்சத்தில் ஆழ்ந்துள்ள வாகன ஓட்டிகள்.