அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை.எம்.ஆர்.பாலாஜி ஏற்பாட்டில், அரியலூர் மாவட்டம் திருமானூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புகட்டையில் உள்ள 14-மின்கம்பங்களில் 10 மின்கம்பங்களில் மின்சார இணைப்பு இல்லாமலும் பல்புகள் பொருத்தப்படாமலும் உள்ளதை வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் கவனத்திற்கு எடுத்துசென்று போர்க்கால அடிப்படையில் மின்இணைப்புகள் ஏற்படுத்தி அதிக ஒளி தரும் மின்விளக்குகளை அமைத்து தர வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பல்பு இல்லாத மற்றும் மின்இணைப்பு இல்லாத மின்கம்பங்களை புகைப்படங்களோடு இளைஞர் காங்கிரஸார் விளக்கினர்.இதனையடுத்து உடனடியாக சரிசெய்து தொடர் விபத்துக்களை தவிர்க்க நடவடிக்கை எடுப்போம் என வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் திருமானூர் நகரத் தலைவர் வினோத்குமார்,வட்டாரத் தலைவர்கள் திருநாவுக்கரசு,கங்காதுரை, திருமானூர் நகர இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பி ராஜீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.














; ?>)
; ?>)
; ?>)