அரியலூர் கருணாஸ் ஹோட்டல் , கூட்டரங்கில்,இளைஞர் காங்கிரஸ் ,மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு மாவட்டகாங்கிரஸ் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார்.கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும்,அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாளை எம் .ஆர்.பாலாஜி வரவேற்றார்.

முன்னாள் மாவட்ட தலைவர் சீனி பாலகிருஷ்ணன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆண்டிமடம் ராஜசேகரன்,எஸ் எம் சந்திரசேகர்,மாவட்ட பொருளாளர் மனோகரன்,மாவட்ட பொதுச் செயலாளர் சாம் வர்க்கீஸ்,அரியலூர் நகர காங்கிரஸ் தலைவர் மாமு சிவகுமார்,ஜெயங்கொண்டம் நகர காங்கிரஸ் தலைவர் அறிவழகன் உள்ளிட்டோர் கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மற்றும் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சாகரிகா ராவ், இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே பி சூர்ய பிரகாஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டத்தில் பங்கேற்று ஆளும் பாஜக அரசு இந்திய தேர்தல் ஆணையத்தை கை பாவையாக வைத்துக் கொண்டு, பீகாரில் லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிய செயலையும்,பெங்களூர் மத்திய தொகுதியில் ஒரு லட்சத்திற்கு மேலான போலி வாக்காளர்களை வாக்காளர் பட்டியல் சேர்த்து தேர்தல் தில்லுமுல்லு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் பாஜக,தேர்தல் ஆணைய கூட்டு சதி வேலைகளை கண்டித்துப் பேசினர் .
தொடர்ந்து, அரியலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஸ்டாப் வாக்கு திருட்டு என்ற வாசகம் அச்சடிக்கப்பட்ட துணிப்பைகளை சிறப்பு அழைப்பாளர்கள் நிர்வாகிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் ஏபிஎஸ் பழனிச்சாமி,ராகவன்,கலைச்செல்வன், தலைவர்கள் கர்ணன்,பாலகிருஷ்ணன்,திருநாவுக்கரசு,கங்காதுரை,ராஜேந்திரன்,மாவட்ட பொதுச் செயலாளர் சீமான்,இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் எம் கே எஸ் புகழ்ராஜ்,சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் நிக்கோலஸ் ராஜ், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்,திருமானூர் வட்டார இளைஞர் காங்கிரஸ்.தலைவர் பாரதி, நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜு,ஜெயங்கொண்டம் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜிவ்பிரியங்கா, கூட்ட முடிவில் அரியலூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரிய ஜான் பிரிட்டோ நன்றி கூறினார்.