சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கலை கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளை பேசி ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்து, வேண்டுமென்றே அவர்களை விபத்தில் சிக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த இருவரையும் பார்த்துக் கொண்டே இருசக்கர வாகனத்தில் சென்ற வாகன ஒட்டி ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது மோதி கீழே விழுந்து விபத்தில் சிக்கியதை கண்டு கேலி செய்த இளைஞர்கள் இந்த வீடியோவை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். ரீல்ஸ் மோகத்தில் வேண்டுமென்றே விபத்துக்கள் ஏற்படுத்தும் இவர்கள் மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.









; ?>)
; ?>)
; ?>)
