• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜா

Byகாயத்ரி

Nov 20, 2021

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்தவர் இளையராஜா. இந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழும் இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான தமிழ் ரசிகர்கள் உள்ளனர். தற்போதும் படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இவரது பாடல்கள் ஸ்பாட்டிபை என்ற ஆப்பில் கிடைக்கிறது. இதுதொடர்பான விளம்பரங்களிலும் இளையராஜா தோன்றி உள்ளார்.

இளையராஜா தன்னுடைய பிளேலிஸ்ட்டுகளை விளம்பரப்படுத்தும் வகையில் 3 நிமிட விளம்பரப் படத்தில் நடித்தார். தற்போது இந்த விளம்பரப் படத்தின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று இந்த விளம்பரம் காட்சிப்படுத்தப்பட்டது.

இளையராஜா இதுகுறித்த புகைப்படத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், ‘இந்த புனிதமான நாளில் இசையின் ராஜா, நியூயார்க்கில் உள்ள பில்போர்ட்ஸ் ஆஃப் டைம் ஸ்கொயர். ராஜா விதிகள்’ என்று பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.