• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

வங்க தேசத்தில் நடைபெற்ற தென்கிழக்கு நாடுகளுக்கான வூசு போட்டி

BySeenu

Oct 6, 2024

தமிழகத்தில் இருந்து இந்திய அணி சார்பாக விளையாடி கோவை மாணவி தங்கம் உட்பட மூன்று பதக்கம் வென்றனர்.

வங்கதேசத்தில் நடைபெற்ற சவுத் ஏசியன் ஸ்கூல் காம்பேட் கேம்ஸ் வூசு போட்டியில் ஒரு தங்கம் உட்பட மூன்று பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய மாணவிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

கோவை சிவானந்தாகாலனி பகுதியை சேர்ந்த ஆடிட்டர் சண்முக வடிவேல், ஷிவ பிரியா ஆகியோரின் மகள் வேத ஸ்ருதி…

சிறு வயது முதலே தற்காப்பு கலையான வூசு போட்டிகளில் தேசிய,சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ள மாணவி வேத ஸ்ருதி, அண்மையில் வங்கதேசத்தில் நடைபெற்ற சவுத் ஏசியன் ஸ்கூல் காம்பேட் கேம்ஸ் வூசு போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்டார்.

ஈரான், ஈராக், இந்தியா பங்களாதேஷ், பூடான், நேபால் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய அணி சார்பாக தமிழகத்தில் இருந்து ஒரே வீரங்கானையாக கலந்து கொண்ட மாணவி வேத ஸ்ருதி நன் குன் பிரிவில் ஒரு தங்கம் ,மற்றும் நான் குவான், நந்தாவூ ஆகிய பிரிவுகளில் இரண்டு வெள்ளி என மூன்று பதக்கங்கள் வென்று அசத்தினார்.

சர்வதேச அளவிலான வீரர்,வீராங்னைகள் கலந்து கொண்ட போட்டியில் வென்று கோவை திரும்பிய வேத ஸ்ருதிக்கு கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு வூசு சங்கம் சார்பாக உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் ஜான்சன்,மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவிக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதேபோல அவருக்கு,விமான நிலையத்தில் அவருக்கு இனிப்பு வழங்கி அவரது பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேத ஸ்ருதி தமக்கு ஆதரவும் உற்சாகமும் வழங்கி தம்மை வழி அனுப்பி வைத்த தமிழ்நாடு துணை முதல்வர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக வூசு சங்க தலைவர் அலெக்ஸ் அப்பாவு ஆகியோருக்கு தமது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.

மூன்று பதக்கங்களை வென்றுள்ள வேத ஸ்ருதி இந்த தொடரில் தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு விளையாடிய ஒரே வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.