• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காசியில் உள்ள கால பைரவர் கோவிலில் பிரதமர் வழிபாடு

வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக இன்று தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு வந்துள்ளார். உத்தரபிரதேசம் 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள கால பைரவர் கோயிலில் ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தார். இன்னும் சற்று நேரத்தில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சுமார் 339 கோடி செலவில் கட்டப்பட்ட காசி விஸ்வநாத் தாமின் முதல் கட்டத்தைத் திறந்து வைக்கிறார். இந்த திட்டத்தின் முதல் கட்டத்தில் மொத்தம் 23 கட்டடங்கள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.