விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறது
விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்மூலம் பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்பக்கத்தில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில், மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியானது 29.09.2023 முதல் 06.10.2023 வரை உள்ளது.
இந்த கண்காட்சியில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு ஒன்றியங்களின் கீழ் செயல்படுத்தப்படும் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் வீட்டு அலங்கார பொருட்கள், உணவு பொருட்கள், மூலிகைப் பொருட்கள் சோப்பு வகைகள், வீட்டிலேயே தயாரிக்கப்படும் எண்ணெய், பெண்களுக்கு தேவையான காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள், உணவு பலகாரங்கள், மெழுகுவர்த்தி, சணல் கொண்டு தயாரிக்கப்படும் பேக் வகைகள்,புடவைகள், நெய் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
எனவே விழுப்புரம் நகர மக்கள் இந்த கண்காட்சியை கண்டு களித்து வீட்டுக்கு தேவையான அனைத்து வகையான பொருட்களை வாங்கி பயனடையுமாறு மகளிர் சுய உதவி குழு பெண்மணிகள் கேட்டுக்கொண்டனர்.