• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விபத்தில் உயிரிழப்பு..,

BySeenu

Sep 26, 2025

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பானுமதி(52) பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை அவரது மகனுடன் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் அரிசி மூட்டையை ஏற்றி வந்த ஈச்சர் வேனை பார்த்து வாகனத்தை நிறுத்த முயன்றதாக தெரிகிறது.

அப்போது ஈச்சர் வாகனத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் நிலை தடுமாறி இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.