• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு!!

BySeenu

Jul 18, 2025

கோவை மாவட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம் உட்பட்ட குழிவயல் சராகம் பகுதியில் ஜெயசாம்ராஜ் என்பவர் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் ஜீவா என்பவரின் மனைவி செல்வி வன எல்லை அருகில் உள்ள ஆற்றில் துணி துவைத்து கொண்டி இருக்கும் போது எதிர்பாராத விதமாக அங்கு ஒற்றை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்து விட்டார்.

சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக தினசரி வனவிலங்கு நடமாட்டம் இருப்பதனாலும் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். காட்டு யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.