• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அட்லிக்கு நான்காவது முறை வாய்ப்பு வழங்குவாரா விஜய்

புதிய படம் தொடர்பாக நடிகர் விஜய் – இயக்குநர் அட்லி இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளார். ‘தோழா’, ‘மஹரிஷி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வம்சி இதனை இயக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் 66-வது படம். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இப்படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள 67-வது படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வி தயாரிப்பாளர்கள் வட்டாரத்தில் இருந்து வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், புதிய படம் தொடர்பாக விஜய் – அட்லி – ஏஜிஎஸ் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தப் பேச்சுவார்த்தை தற்போது ஆரம்பகட்டத்தில் மட்டுமே இருப்பதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தற்போது ஷாரூக் கானை வைத்து இந்தியில் ஒரு படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்துக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே அடுத்தப் படத்துக்கான பணிகளை அட்லியால் தொடங்க முடியும் .மேலும், தற்போது நடந்துவரும் இந்தப் பேச்சுவார்த்தை இறுதியானால் விஜய் – அட்லி இணையும் நான்காவது படமாக இப்படம் இருக்கும்.