கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மணலி ஜங்ஷனில் குமார் மருத்துவமனைக்கு எதிரே மூலச்சல் மற்றும் பத்மநாபபுரம் அரண்மனை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலையை தேசிய நெடுஞ்சாலை முகப்பில் தடுப்புகளை ஏற்படுத்தி நெடுஞ்சாலையை போக்குவரத்துக்கு இடையூறாக அடைத்து ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட அவசர சிகிச்சைக்கு செல்ல இயலாத நிலையில் அடைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.

மத விழாக்கள் என்ற பெயரில் சாலையை அடைத்து பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதும் மாற்றுமத வழிபாட்டுத்தலத்தின் அருகில் இதுபோன்ற செயல்களை நடத்துவதால் மத மோதல்கள் வரை ஏற்படும் அபாயமும் உள்ளது. சாலையில் இடையூறு ஏற்படுத்தி இருக்கும் பகுதிக்கு அருகில் சுமார் மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிட்சைபெறும் நோயாளிகள் பாதிக்கும் வண்ணம் மிக அதிக சத்தத்துடன் ஒலிப்பெருக்கி வைத்துள்ளனர் . பேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலை சந்திக்கும் ஜங்ஷன் பகுதியான தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே அதிக அளவு ஒலி பெருக்கிகள் சத்தத்துடன் வைத்து சாலையை அடைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்து உள்ளதால் அப்பகுதியில் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள் விபத்தை சந்திக்கும் அவலமும் ஏற்பட்டு உள்ளது.

இருசக்கர வாகனங்களில் செல்வோர் பின்னால் வரும் வாகனங்கள் ஒலி எழுப்பினால் கூட கேட்காத அளவில் மிக அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலை அருகே போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி உள்ளதால் அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கும் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கும் அருகில் இருக்கும் மாற்று மத வழிபாட்டு ஸ்தலத்திற்கும் பெரும் இடையூறு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி சுமார் ஐநூறு மீட்டர் மீட்டர் தூரத்தில் பத்மநாபபுரம் தலைமை அரசு மருத்துவமனை முதல் பல்வேறு தனியார் மருத்துவமனைகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன் மாற்று மத வழிபாட்டு ஸ்தலத்தின் அருகே மற்றொரு தரப்பினர் சிறிய அளவில் கோவில் கட்டி சிலை வைக்க முயன்றது தடுத்து நிறுத்தப்பட்டு அப்போது மத மோதல்கள் தடுக்கப்பட்டு அந்த சிறிய கோவில் மூடி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து மூலச்சல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு இடையூறாக மூடப்பட்டுள்ள நிலையில் அது சம்பந்தமான மத வழிபாட்டு ஸ்தலமோ சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் அப்பால் குளக்கரையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் நெடுஞ்சாலையை மூடி போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தும் அளவில் எப்படி அனுமதி கொடுத்தனர் என்பதும் காவல் துறை ஏன் கண்டுகொள்ளவில்லை என்பதும் அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கிகள் அமைத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
நீதிமன்றம் சாலையை அடைத்து ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை செய்து உள்ளதை கணக்கில் கொண்டு சாலையை அடைத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதை தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.