• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவை மாநகருக்குள் ஊடுருவும் வனவிலங்குகள்..,

BySeenu

Jan 3, 2026

கோவை சரவணம்பட்டி பகுதியில் யானைகள் தொடர்ந்து அத்திப்பாளையத்தில் மான்கள் 40 கிலோமீட்டர் கடந்து ஊருக்குள் வரும் வனவிலங்குகள்.

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை விட்டு பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர்களுக்குள் வனவிலங்குகள் தொடர்ந்து ஊடுருவி வருவது பொதுமக்கள் மற்றும் மன உயிரின ஆர்வலர்கள் பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. உணவு தட்டுப்பாடா அல்லது வேட்டைக்காரர்களின் அச்சுறுத்தலா என்ற கேள்வி தற்பொழுது எழுந்து உள்ளது.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வறட்சியால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் கிராமத்திற்குள் வந்தன அவன் கடந்த ஆண்டு பெய்த நல்ல மழையின் காரணமாக மலைப்பகுதியில் தற்பொழுது பச்சை போர்வை போர்த்தியது போல் செழிப்பாக உள்ளன. இருந்த போதிலும் பழக்கப்பட்ட உணவுகளை தேடி விளைநிலங்களில் உள்ள பயிர்கள் மற்றும் வீடுகளில் உள்ள அரிசி கோதுமை போன்ற உணவு பொருட்களை பழகிப்போன யானைகள் மீண்டும் வனத்திற்குள் செல்லாமல் கிராமங்களிலேயே முகாமிட்டுள்ளன. யானைகள் மட்டுமின்றி காட்டு பன்றிகள், காட்டு மாடுகள் மற்றும் சிறுத்தை கரீம் சிறுத்தைகள் அடிக்கடி கிராமப் பகுதிகளில் தென்பட்டன.

ஆச்சரியப்படும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவை மாநகர பகுதியான சரணம் மெட்டி கீரனத்தம் ஐடி பார்க் அருகே மூன்று கார்த்தி யானைகள் வந்தன. அங்குள்ள ஒரு குட்டையில் அவை உற்சாகமாக குளியல் போட்டன வனத்துறையினரின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு அவற்றை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

யானைகளைத் தொடர்ந்து அதன் அருகே உள்ள அத்திப்பாளையம் பகுதியில் தற்போது ஆறு முதல் ஏழு மான்கள் கொண்ட கூட்டம் ஒன்று வழி தவறி வந்து உள்ளது. வனப்பகுதியில் இருந்து இவ்வளவு தூரம் ஆண்கள் கூட்டம் கூட்டமாக ஊருக்குள் வருவது அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்தத் தொடர் இடப்பெயர்வு குறித்து வன உயிரின ஆர்வலர்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பி வருகின்றனர். வனப்பகுதிக்குள் வேட்டையர்களின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதா ? அவர்களிடம் இருந்து தப்பிக்க உயிர் பயத்தில் விலங்குகள் ஊருக்குள் ஓடி வருகிறதா ? யானைகளின் பாரம்பரிய வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதால் அவை வழி மாறி மாநகரப் பகுதிக்குள் நுழைகிறதா ? காட்டில் உணவு இருந்தும் பயிர்களை தேடி அவை நாட்டை நோக்கி வருகிறதா ? கோவை மாவட்ட வனத்துறையினர் இது குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு விலங்குகள் ஊருக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

https://we.tl/t-MN9Jj490Wg