• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

என்னது தன்னை தானே திருமணம் செஞ்சிக்கிட்டாங்களா..?பிரேசில் மாடல் அழகி

Byகாயத்ரி

Nov 25, 2021

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் 31 வயதான மாடல் அழகி கிறிஸ் கலேரா. கடந்த காலங்களில் உறவு முறிவுகளால் ஏற்பட்ட விரக்தி காரணமாக தன்னை தானே திருமணம் செய்துகொள்ள அவர் முடிவெடுத்தார். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் தன்னை தானே கிறிஸ் கலேரா திருமணம் செய்துகொண்டார்.


தனது வாழ்க்கையில் தனியாக இருக்க பயம் கொள்ளும் சுபாவம் உடைய பெண்ணான தான் தற்போதைய நிலையில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அதனை உணர்ந்த நிலையில் அதனை கொண்டாட முடிவு செய்து தன்னை தானே திருமணம் செய்துகொண்டதாகவும் கிறிஸ் கலேரா அப்போது கூறியிருந்தார்.

இந்நிலையில், தன்னை தானே திருமணம் செய்துகொண்ட 90 நாட்களுக்கு உள்ளாகவே தன்னை தானே விவாகரத்து செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.மிகவும் சிறப்பு வாய்ந்த நபர் ஒருவரை சந்தித்ததாகவும் தற்போது காதல் மீது நம்பிக்கை வந்துள்ளது என்றும் தெரித்துள்ள அவர், விவாகரத்து செய்துகொள்வது வரை தன்னுடனான தனது வாழ்க்கை மகிழ்ச்சியாகவே இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.