குமாரபாளையம், பள்ளிபாளையம் தொகுதி சார்ந்த மக்கள் திட்ட பணிகளை தொடங்க வந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலை, மேல்நிலை குடிநீர் தொட்டி, கழிவுநீர் கால்வாய்,பாலம், பொதுக் கழிப்பிடம் 1- கோடியே 29- லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அதற்குண்டான நல்ல திட்ட பணிக்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி இன்று தொடங்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா பணிகளை தொடங்கி வைத்தார்.


உடன் அதிமுக பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன், ஆலம்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் செல்லதுரை, படைவீடு கழகச் செயலாளர் ஜெகநாதன், ஊராட்சி தலைவர்கள், ஆயக்காட்டூர் வேல்முருகன், ஐடி விங்க் மாவட்ட துணை தலைவர் சோமு, அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

