மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உத்தப்ப நாயக்கனூரில் உள்ளஆதரவற்றோர் இல்லத்தில் உணவு பொருட்கள் மற்றும் சேலை வழங்கபட்டது உத்தப்பநாயக்கனூரில் உள்ள மனிதநேய மகாத்மா ஜோதி சேவை மையத்தில்
தலைவர் மல்லிகா தலைமையில் ஆதரவற்ற நிலையில் பெற்றோர்கள் இல்லாத குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய துணை தலைவர் உசிலம்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிவி கதிரவன் ஆணைக்கிணங்க தொழிற்சங்க மாநில செயலாளர் வழக்கறிஞர் ஆர் திருப்பதி ஆணைக்கிணங்க தொழிற்சங்க மாநில துணை செயலாளர் பொன.ஆதிசேடன் தலைமையில் ஏழை எளியவர்களுக்கு அரிசி சிப்பம் வேஷ்டி சேலை பிஸ்கெட் பெட்டி சீனியப்பா டிரேடர்ஸ் சார்பாக மாரியப்பன் அரிசி சிப்பம் அன்பு சார்பாக அரிசி சிப்பம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.