த.வெ.க.தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புற்று நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை புறநகர் கிழக்கு மாவட்ட .செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இதில், போர்வைகள்,பிஸ்கட்டுகள்,பழங்கள் மற்றும் ஹார்லிக்ஸ் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கிட் வழங்கப்பட்டது.
ரேஷ்மா பேகம்,ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இணைச் செயலாளர் சபரி,பொருளாளர் சரவணக்குமார்,செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், கோமதி தெளபிக் ஆகியோர் உடனிருந்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க.கோவை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாபு, மக்களின் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர்,தலைவர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.