கும்பகோணத்தில் வள்ளலார் பிறந்த நாளை முன்னிட்டு, கும்பகோணம் வள்ளலார் லயன் சங்கத்தின் சார்பில், சாசனத் தலைவர் ரவி தலைமையில், கும்பகோணம் சுற்று வட்டார பகுதியில் உள்ள முதியோர் இல்லங்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தலைவர் சரவணன், பொருளாளர் சிவராமகிருஷ்ணன், ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அரிய திடல் வள்ளலார் கோவில், திருவலஞ்சுழி சினேகம் முதியோர் இல்லம், சக்கரைபடித்துறை சமரச சுத்த சன்மார்க்க சங்கம் மற்றும் பலருக்கு உணவுகள் வழங்கப்பட்டது.
