• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு நாம் முன்மாதிரியாக திகழவேண்டும்-முதன்மை கல்வி அதிகாரி பேச்சு

ByKalamegam Viswanathan

Feb 14, 2023

மாணவர்கள் நம்மளை பார்த்து வளர்கிறார்கள், எனவே நாம் என்ன சொல்கிறோமோ அதை செய்ய வேண்டும். நாம் முன்மாதிரியாக திகழ்ந்தால் தான் மாணவர்களும் அப்படியே வளர்வார்கள் எனவே அதை பெற்றோரும் நம் ஆசிரியர்களும் அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என – மதுரை தனியார் மேல்நிலை பள்ளி ஆண்டு விழாவில் “முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா பேச்சு”*
மதுரை விரகனூரில் உள்ள கே எல் என் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது ஆண்டு விழா நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா மற்றும் தியாகராஜா கல்லூரியின் முன்னாள் முதல்வர் அருணகிரி ஆகியோர் பங்கு பெற்று விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மதுரை முதன்மை கல்வி அதிகாரி கார்த்திகா மாணவர்களின் பெற்றோர் மற்றும் ஆசிரியருக்கு அறிவுரை கூறினார் அப்போது அவர் பேசுகையில் மாணவர்கள் நம்மளை பார்த்து வளர்கிறார்கள், எனவே நாம் என்ன சொல்கிறோமோ அதை செய்ய வேண்டும். நாம் முன்மாதிரியாக திகழ்ந்தால் தான் மாணவர்களும் அப்படியே வளர்வார்கள் எனவே அதை பெற்றோரும் நம் ஆசிரியர்களும் அதை கடைபிடிக்க வேண்டும் அப்போதுதான் மாணவர்களின் எதிர்காலம் ஏற்படும் என்று அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல்வேறு திறமையை வெளிப்படுத்தி பெற்றோர்களை கவர்ந்தனர்.