கோவையில் தமிழ் ஈழம் மற்றும் தமிழர்களை இழிவாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள ஜாட் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை கணபதி பகுதியில் உள்ள ப்ரோசோன் மால் வணிக வளாகத்தில் ஜாட் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.இப்படத்தில் தமிழ் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்களை இழிவாக சித்தரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அத்துமீறி திரையரங்கிற்கு உள்ளே நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவர்களை குண்டுகட்டாக இழுத்து வெளியே விட்டனர்.
மேலும் இத்திரைப்படத்தை திரையிடப்பட்டால் உங்களது திரை கிழிக்கப்படும் என அப்போது நாம் தமிழர் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் திரையரங்கு வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.